இளைய தலைமுறையின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் ஒன்று காதல். ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, காற்று புகமுடியாத இடத்திற்கும் காதல் புகுந்துவிடும். பெற்றோர் மற்றும் உற்றார்- உறவினர்களின் சொல்லுக்கு செவி சாய்க்காதவர்கூட, காதலில் ஈடுபட்டால் காதலியின் கடைக்கண் பார்வைக்குக் கட்டுண்டு போவார்கள். கெட்டவர்களையும் நல்லவராக்கும் வலிமை காதலுக்குண்டு.
காதலிப்பவர்களுக்கு இந்த உலகிலுள்ள அனைத்தும் அழகாகத் தெரியும். மழை வருமா என வானத்தை நிமிர்ந்து பார்க்காதவனுக்குக்கூட காதலில் விழுந்தால் வானமே கையிலிருக்கும். மேகங்களில் மிதப்பான். கோடை வெயில் சுடாது. குளிர்காலத்தில் குளிராது. கவிதை பிறக்கும்.
கற்பனை ஊற்றெடுக்கும். எச்சில் கையில் காக்கை ஓட்டாதவனும் காதலியுடன் இருக்கும்போது பிச்சைகாரனுக்கு பத்து ரூபாய் கொடுப்பான்.
வெட்ட வெளியில், சுடும் வெயிலில் கடற்கரை மணலிலும், பூங்காக்களில் செடியின் மறைவிடங்க ளிலும், சுற்றியிருப்போரைப்பற்றிக் கவலைப் படாமல் நடந்தகொள்வதல்ல காதல். அது புனிதமானது. காமம் இயற்கையானது என்றாலும், திருமணத்திற்குப் பின்னர்தான் என்று மனக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது நல்லது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் என்பதால், மலர் கண்காட்சியைப்போல எங்கு பார்த்தாலும் காதலர்கள் கைகோர்த்து நடப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்து நடக்கும் பெற்றோர்கள்
அதிகரித்துகொண்டே இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நண்பர்களைப்போல பாவித்து, அவர்களின் இன்ப- துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அதுபோல பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் நல்ல வழிகாட்டியாக இருப்பார்களே தவிர, வாழ்க்கையை அழிப்பவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இனக்கவர்ச்சிக்கும், உண்மையான காதலுக்கு முள்ள வித்தியாசத்தைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
ஜோதிடரீதியாக, காதல் உணர்வுண்டாக நவகிரகங்களின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது. பொதுவாக ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரனாவார். பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாயாவார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/logveyogam.jpg)
ராசி சக்கரத்தில் ஒவ்வொரு பாவத்திற் கும் ஒவ்வொரு காரகத்துவமுண்டு. திருமணத் தைப்பற்றி ஆராயும்போது குடும்ப ஸ்தானமான 2-ஆமிடமும், சுக ஸ்தானமான 4-ஆம் வீடும், மன ஈர்ப்பு மற்றும் புத்திர பாக்கியத்திற்குரிய 5-ஆமிடமும், களத்திர ஸ்தானமான 7-ஆமிடமும், மாங்கல்ய பாவமான 8-ஆமிடமும், அயன, சயன, சுக ஸ்தானமான 12-ஆமிடமும் முக்கியத்துவம் வகிக்கின்றன.
காதல் திருமணத்தைப் பற்றி ஆராயும்போது 5, 7-ஆமிடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. ஏனென்றால் மனதில் ஏற்படும் ஈர்ப்புத் தன்மையைக் குறிப்பது 5-ஆமிடமாகும். 5-ஆம் வீடு ஜாதகரின் எண்ணத்தையும், 11-ஆம் வீடு ஜாதகருடன் பழகும் நபர்களின் எண்ணத்தையும் குறிக்கும் பாவங்களாகும். 5-ஆம் வீடு ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்று 7-ஆம் அதிபதியுடன் இனையும்போது ஜாதகருக்கு மனதளவில் காதல் எண்ணங்கள் ஏற்படும் அமைப்பு, உடன்பழகும் நபர்களை விரும்பித் திருமணம் செய்யும் சூழ்நிலை உண்டாகும். 5-ஆமதிபதி நீசம் பெற்றாலும், வக்ரம்பெற்றாலும் காதலில் ஈடுபட்டு ஏமாற்றத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
7-க்கு 5-ஆம் வீடான 11-ஆமதிபதி பலம்பெற்றால் ஜாதகருடன் பழகும் நபர்கள் ஜாதகரை விரும்பும் நிலை ஏற்பட்டு, அது காதல் திருமணத்தில் முடியும். 11-ஆமதிபதி நீசம்பெற்றாலும் வக்ரம்பெற்றாலும், உடன்பழகும் நபர்கள் ஜாதகரை விரும்பி, அதில் சிக்கல் உண்டாகும்.
லக்னாதிபதி 5-ல் இருந்தாலும், 1, 5-க்குரிய அதிபதிகள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும் காதலில் ஈடுபடும் வாய்ப்புண்டாகும். 5, 7-ல் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் உறவினர்களை விரும்பும் நிலை, தனது இன நபரைக் கைப்பிடிக்கும் வாய்ப்புண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 5, 7-ல் சனி, ராகு அல்லது கேது ஆகிய கிரகங்கள் அமைந்தாலும், 5, 7-க்கு அதிபதிகள் சனி, ராகு அல்லது கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும், ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன்- சனி, ராகு அல்லது கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும், பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்- சனி, ராகு அல்லது கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் அந்த ஜாதகர் அந்நிய நபரைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. குறிப்பாக வேற்றின, வேற்றுமொழி, வேற்று மதம், மாறுபட்ட இடத்தில் பிறந்த நபரைத் திருமணம் செய்ய நேரிடுகிறது.
சனி ஆதிக்கம் 5, 7, களத்திரகாரகனுக்கு இருந்தால், தகுதி குறைவான நபரைத் திருமணம்செய்ய நேரிடும். ராகு ஆதிக்கம் 5, 7, களத்திரகாரகனுக்கு அதிகப்படியாக இருந்து, உறவு களைக் குறிக்கும் கிரகங்களான சூரியன், சந்திரன், குரு பாதிக்கப்பட்டிருந்தால் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களுடன் நட்பு ஏற்படுகிறது. கேது ஆதிக்கம் 5, 7, களத்திரகாரகனுக்கு அதிகப்படியாக இருந்து, உறவுகளைக் குறிக்கும் கிரகங்களான சூரியன், சந்திரன், குரு பாதிக்கப்பட்டிருந்தால் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களுடன் நட்பு ஏற்படுகிறது.
காதல் எந்தவகையிலும் மற்றவர்களை பாதிக்காமல் நடந்துகொள்வது இன்றைய தலைமுறையினரின் தலையாய கடமையாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/logveyogam-t.jpg)